பூபதிநகரில் பெண்களை என்ஐஏ-தான் துன்புறுத்தியது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)

பூபதிநகரில் பெண்களை என்ஐஏ அதிகாரிகள்தான் துன்புறுத்தியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பூபதிநகரில் பெண்கள் யாரையும் தாக்கவில்லை. உண்மையில் என்ஐஏ-தான் முதலில் தாக்கியது. அதிகாலை நேரத்தில் குடியிருப்புக்குச் சென்று பெண்களைத் துன்புறுத்தினால் என்ன செய்வார்கள்? வீட்டில் உட்கார்ந்து முகத்தை மூடிக் கொள்வார்களா?. மக்களவைத் தேர்தலுக்கு முன், தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுத்திருப்பது, கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில், பா.ஜ.,வுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் பூபதிநகர் பகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் வீட்டில், 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் விசாரனைக்கு ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் 8 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) கடந்த மாதம் அழைப்பாணை விடுத்திருந்தது. இதனிடையே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் இருவரை இன்று அதிகாலை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர்களைச் செல்ல விடாமல் அப்பகுதி மக்கள் தடுத்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகளின் வாகனங்களைச் சூழ்ந்துகொண்ட உள்ளூர் மக்கள், அவர்களை முன்னோக்கிச் செல்ல விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. சிலர் அதிகாரிகளின் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அதிகாரிகள் சிலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப்படையினருடன் அப்பகுதியில் உள்ள பெண்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதோடு, காவல்துறை வாகனங்களை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் மிட்னாபூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மோனோபிரதா ஜனா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com