ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

புதுச்சேரியில் ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்
ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

புதுச்சேரி சொக்கநாதன்பேட்டையை சேர்ந்த ரமேஷ் மற்றும் தேவி ஆகிய தம்பிதியினரின் மகள் கிருஷ்ணசூர்யா. இவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

ஆசிரியர்கள் துன்புறுத்தல் காரணமாக, மன உலைச்சலில் தனது வீட்டில் உள்ள அறையில் இரவில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மகள் காணவில்லை என தேடிய பெற்றோர், அறையின் கதவை திறந்து பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரியை முற்றுகையிட்ட மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி முதல்வரிடம் நியாயம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com