தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தலைவாசல்: பிரசாரத்திற்கு சென்ற போது வேன் கவிழ்ந்தது: 2 பேர் பலி

20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 4:27 pm

DIN

தலைவாசல் அருகே அமைச்சர் உதயநிதி பங்கேற்ற திமுக பிரசார கூட்டத்திற்கு மினி சரக்கு வேனில் சென்ற போது நேரிட்ட விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையம் பகுதியில் இருந்து, கெங்கவல்லியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து பங்கேற்ற கூட்டத்திற்கு வருகை புரிந்தார். அப்போது மினி சரக்கு வேனில் 30க்கும் மேற்பட்டோர் சென்றனர்.

அப்போது நாவலூர் ஏரிக்கரை சாலை வளைவில் மினி சரக்கு வேன் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த அனைவரும் ஏரியில் விழுந்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காமக்கா பாளையத்தைச்சேர்ந்த மருதை மகன் தயாநிதி (29) முத்துக்கருப்பன் மகன் செல்லதுரை (50) ஆகிய இருவரும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து வீரகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர் . மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த

ஓட்டுநர் ராஜதுரை, தனலட்சுமி, தேன்மொழி, சோலைமுத்து அரவிந்த் குமார், ஆசைத்தம்பி சின்னப் பையன், செல்லோ பெருமாள் ஜெயபாலன், ராமசாமி தங்கவேல், சின்னவன் துரை, வையாபுரி யாசினி, செல்லப்பன், ராமசாமி சீனிவாசன், தங்கவேல் உள்ளிட்ட 20 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.