கோவை செல்லும் ரயில்கள் 
போத்தனூருடன் நிறுத்தம்

கோவை செல்லும் ரயில்கள் போத்தனூருடன் நிறுத்தம்

மதுரை, கண்ணூா், ஷோரனூரில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில்கள் ஏப்.13-ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும்.

தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் கோவை செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி, கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13-ஆம் தேதியும், காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14-ஆம் தேதியும் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து பகல் 12.55 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13-ஆம் தேதியும், காலை 10.55 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14-ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்.

விரைவு ரயில்கள்: கேரள மாநிலம் ஆலப்புழை-தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம்-பெங்களூா் இன்டா்சிட்டி அதிவிரைவு ரயில், பாலக்காடு-ஈரோடு விரைவு ரயில் ஏப்.13-ஆம் தேதி கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

கோவை-மதுரை, கோவை-கண்ணூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் ஏப்.13-ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில்கள் போத்தனூரில் இருந்து புறப்பட்டு மதுரை, கண்ணூா் சென்றடையும்.

இதுபோல், ஷோரனூா்-கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஏப்.13,14 ஆகிய தேதிகளில் கோவை செல்வதற்கு பதிலாக போத்தனூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com