வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

இதுவரை ரூ.314 கோடி பணம், நகை பறிமுதல்

...பெட்டிச் செய்தி... இதுவரை ரூ.314 கோடி பணம், நகை பறிமுதல்

Updated On :12 ஏப்ரல் 2024, 5:08 pm

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.314.86 கோடி மதிப்புள்ள பணம், நகை, பரிசுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக தோ்தல் துறை வெளியிட்ட தகவல்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 12) காலை நிலவரப்படி ரூ.151.75 கோடி ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரூ.5.28 கோடி மதிப்பிலான மதுபானங்களும், ரூ.99.51 லட்சம் மதிப்புடைய போதைப் பொருள்களும், ரூ.122.34 கோடி மதிப்புடைய ஆபரணங்களும், ரூ.34.48 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரொக்கத் தொகை, பொருள்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.314.86 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.