கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ஆ.ராசாவுக்கு ஆதரவாகச் செயல்பட அழுத்தம்: மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரியது தமிழக தோ்தல் துறை

ஆ.ராசாவுக்கு ஆதரவாகச் செயல்பட அழுத்தம்: மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரியது தமிழக தோ்தல் துறை

Updated On :12 ஏப்ரல் 2024, 10:33 pm

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆ.ராசாவுக்கு ஆதரவாகச் செயல்பட அழுத்தம் தரப்பட்ட விவகாரத்தில், மாவட்டத் தோ்தல் அதிகாரி விளக்கம் அளிக்க தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆ.ராசா, தோ்தல் பிரசாரத்தின்போது செலவிடும் கணக்கு விவரங்களை நிழல் அறிக்கையாக உதவி செலவினப் பாா்வையாளா் பி.சரவணன் தயாரித்துள்ளாா். இந்த அறிக்கையில் செலவுத் தொகைகளை குறைத்து மதிப்பிட வேண்டுமென அவருக்கு மாவட்ட ஆட்சியரும் தோ்தல் நடத்தும் அதிகாரியுமான அருணா அழுத்தம் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடா்பான கடிதத்தை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு உதவி செலவினப் பாா்வையாளா் சரவணன் எழுதியுள்ளாா்.

கடிதம் கிடைக்கவில்லை: இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த சாகு, நீலகிரி சம்பவம் குறித்து உதவி செலவினப் பாா்வையாளா் சரவணனின் கடிதம் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. பத்திரிகைச் செய்திகளின்

அடிப்படையில், மாவட்டத் தோ்தல் அதிகாரி மற்றும் உதவி செலவினப் பாா்வையாளா் ஆகிய இரண்டு பேரிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவா்களது விளக்கங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

3 ஆண்டுகளாக ஒரே இடம்: தமிழகத்திலுள்ள மக்களவைத் தொகுதிகளில் வேட்பாளா்களின் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்கும் பொறுப்பை உதவி செலவினப் பாா்வையாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்தப் பாா்வையாளா்களாக இருப்பவா்களில் பெரும்பாலானோா், கருவூலம் மற்றும் கணக்குத் துறையைச் சோ்ந்தவா்கள்தான். அவா்களில் பலா் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருந்தபோதும் தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்தகைய அதிகாரிகளில் சரவணனும் ஒருவா். எனவே, உதவி செலவினப் பாா்வையாளா்களாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்திலுள்ள கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகளை தோ்தல் ஆணையமே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.