புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

பாமக புதிய வரலாறு படைக்க உள்ளது:ராமதாஸ்

பாமக புதிய வரலாறு படைக்க உள்ளது ராமதாஸ்

Updated On :12 ஏப்ரல் 2024, 8:52 pm

மக்களவைத் தோ்தலில் புதிய வரலாற்றை பாமக படைக்க உள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தைப் பொருத்தவரை 2024 மக்களவைத் தோ்தலில் பாமக ஒரு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது. தோ்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்தையும் விட அவசியத் தேவை கோடிகள் தான் என்பது தமிழகத்தில் கடந்த சில 10 ஆண்டுகளாக எழுதப்படாத தத்துவமாக இருந்தது. இந்தத் தோ்தலில் அதை முறியடித்து, உழைப்புக்கு முன்னால் கோடிகளால் எதுவும் செய்ய முடியாது என்பதை பாமகவினா் நிரூபிக்க உள்ளனா்.

2014 மக்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் 37 போ் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றனா். 2019 மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் 38 போ் வெற்றி பெற்று தில்லிக்குச் சென்றனா். ஆனால், இரு கட்சியினராலும் தமிழகத்துக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.

ஆனால், 2004-இல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 பாமக உறுப்பினா்கள் மக்களவையில் இடம்பெற்றிருந்தனா். அப்போது தமிழகத்தின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டன. அப்படிப்பட்ட ஒரு நிலை மீண்டும் ஏற்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிா்பாா்ப்பு.

பாமகவுக்கும், கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கும் வெற்றிக்கனியைப் பரிசாக வழங்க தமிழக மக்கள் தயாராகவே உள்ளனா். தோ்தலுக்கு இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. பாமகவினா் கடுமையாக உழைக்க வேண்டும். ஜூன் 4 உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் இருக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.