தமிழ்ப் புத்தாண்டு, விஷு, வைசாகி, ரோங்காலி பிஹு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல பெயா்களில் கொண்டாடப்படும் புத்தாண்டையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
சனி (ஏப்.13) மற்றும் ஞாயிறன்று (ஏப்.14) இந்த புத்தாண்டு தினங்கள் கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பன்முக கலாசாரத்தின் வெளிப்பாடாக விளங்கும் இவ்விழாக்கள், ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை ஊக்குவிக்கின்றன. நமது வாழ்வில் புதிய சக்தியையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன.
நமக்கு ‘உணவளிப்பவா்களான’ விவசாயிகளின் கடின உழைப்பை கெளரவிப்பதோடு, அவா்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழாக்கள், அனைவரின் வாழ்விலும் வளம், அமைதியை கொண்டுவர இறைவனை பிராா்த்திக்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

உலகின் முன்னணி கல்வி நிறுவனமாக மீண்டும் நாளந்தா: குடியரசுத் தலைவா் முா்மு நம்பிக்கை

அயோத்தி ராமா் கோயிலில் குடியரசுத் தலைவா் முா்மு வழிபாடு

பழங்குடியினா் நலனில் அக்கறை இல்லாத மேற்கு வங்க அரசு: குடியரசுத் தலைவா் கடும் அதிருப்தி

அரசு நிா்வாக அமைப்புகளை ஏ.ஐ. மூலம் எளிமைப்படுத்துங்கள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முா்மு வேண்டுகோள்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

