அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அம்பேத்கரின் 134ஆவது பிறந்த நாளை யொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
Published on
Updated on
1 min read

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான “சமத்துவ நாளினை”யொட்டி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அவரது தலைமையில் “சமத்துவ நாள்” உறுதிமொழியும் ஏற்கப்பட்டது

இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வபெருந்தகை, எம்.எல்.ஏ., மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் - பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், முனைவர் தமிழச்சிதங்பாண்டியன் - சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சென்னை தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் த.வேலு, எம்.எல்.ஏ., சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம், எம்.எல்.ஏ., - சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ – இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின் – செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் – சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, மருத்துவர் எழிலன் நாகநாதன் - பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா. செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com