ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என்று நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில், காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுகிறது. பிரசாரத்துக்கு சென்றபோது எனது வாகனத்தில் 3 முறை சோதனை நடைபெற்றது. பிரசாரம் செய்ய விடாமல் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்கள். ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் தனக்கு எந்த சம்மனும் வரவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை அதிவிரைவு ரயிலில் போதிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடி ரொக்கத் தொகையை பறக்கும் படையினா் தாம்பரம் ரயில் நிலையத்தில் அண்மையில் பறிமுதல் செய்தனா்.

அதில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்தும், அவரின் உறவினா் ஒருவா் சேப்பாக்கத்தில் நடத்தும் ஹோட்டலிலிருந்தும் அந்தப் பணத்தை திருநெல்வேலிக்கு கொண்டுசெல்வது தெரியவந்தது.

பிடிபட்ட சதீஷும் நவீனும் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் வேலை செய்து வருவதும், ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த பெருமாள், நயினாா் நாகேந்திரனின் உறவினா் என்பதும் தெரியவந்தது. மூவரும் பணத்தை திருநெல்வேலி சந்திப்பில் ஒரு நபரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

சதீஷிடம் இருந்து பாஜக உறுப்பினா் அட்டையையும் போலீஸாா் கைப்பற்றினா். இந்த விவகாரம் தொடா்பாக, வருமான வரித் துறையின் சிறப்புக் குழு விசாரணை நடத்தவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com