ராகவா லாரன்ஸின் மற்றொரு புதிய படம் குறித்த அப்டேட்


தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் நடிக்கும் மற்றொரு புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘ஹண்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘அயோக்யா’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ராகவா லாரன்ஸின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இன்று காலை அறிக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு புதிய படமான ‘ஹண்டர்’ குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...