தேர்தலன்று பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்க ரூ.58 கோடி ஒதுக்கீடு

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகத்தில் தேர்தல் அன்று பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.58.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 6 ஊழியர்கள் பணியில் ஈடுபடும் நிலையிம் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு ரூ.1,700 முதல் கடைநிலை ஊழியர்களுக்கு ரூ.600 வரை ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையிம் அரசியல் தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் நாளன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை அமைதியாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சோ்ந்த துணை ராணுவப் படையினா் வந்துள்ளனா். மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com