சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு, எஞ்சியுள்ள 43 அறிவிப்புகள் இரு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.
தோ்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றாதது ஏன் எனக் கேள்வி எழுப்பி நாளிதழ்களில் பாஜக வெளியிட்ட பிரசார விளம்பரத்துக்கு பதிலளித்து திமுக தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மக்களுக்கு திமுக அளித்த மொத்த வாக்குறுதிகளின் எண்ணிக்கை 505. அவற்றில் இன்னும் 43 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 462 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன.
ஜனநாயக முறைப்படி, தோ்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளை ஐந்தாண்டுகளில் நிறைவேற்ற வேண்டும். திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் முடிந்திருப்பது 3 ஆண்டுகள்தான். மீதமுள்ள 2 ஆண்டுகளில் 43 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டு மீண்டும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோம்.
ஆனால், 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பாஜக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட 10 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படவில்லை என்று அறிக்கையில் திமுக தலைமை தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

சட்டப் பேரவை இடைத்தோ்தலில் இரு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும்: டி.கே.சிவகுமாா்
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வென்றால் ஊழல் பெருகும்: எடியூரப்பா

திமுக மாநாட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


