எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மக்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு -எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

News image
எடப்பாடி பழனிசாமி.
Updated On :17 ஏப்ரல் 2024, 1:52 pm

DIN

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகவும், சேலம் அதிமுக வேட்பாளர் விக்னேஷுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “நாட்டில் பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என்ற நிலை மாற வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், மக்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு.அம்பானி, அதானி, டாட்டா, பிர்லாவுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுகிறது.

வரிமேல் வரி போடப்படுகிறது திமுக ஆட்சியில். மக்களை வஞ்சிக்கிறது மாநில அரசு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆனால், அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. 2 ஆண்டுகளில் ரூ. 30,000 கோடியை கொள்ளையடித்தது விடியா திமுக அரசு.

மக்கள் விரோத ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற தேர்தல் இது. அதிமுகவுக்கு வாக்களிக்கும் போது இவற்றிற்கு தீர்வு காணப்படும். கருத்துக்கணிப்புக்குப் பதிலாக கருத்துத்திணிப்பில் ஒருசில ஊடகங்கள் ஈடுபடுகிறார்கள். சேலம் அதிமுகவின் கோட்டை. தமிழகம் புதுச்சேரியில் 40 இடங்களிலும் அதிமுக வெல்லும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.