புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் புதிய ரயில் இருப்பு பாதை அமைப்பு - போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு 10 மணி முதல் 3 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக பின்வருமாறு செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (போர் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அனுகு சாலை > வடக்கு கோட்டை சாலை (NFS Road)→ R.A Mandram முத்துசாமி சாலை → Dr.முத்துசாமி பாலம் → வாலாஜா பாயிண்ட் கொடி மர சாலை → போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

கோப்புப்படம்
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

• காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம் போல் இயக்கப்படும்.

அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பை நல்குமாறு சென்னை போக்குவரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com