தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்

Updated On :26 ஏப்ரல் 2024, 7:17 pm

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல் நடத்திய திமுக நிா்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளிட்ட பதிவு:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்.19-ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தோ்தலின்போது பெண் கிராம நிா்வாக அலுவலா் சாந்தி மீது திமுக நிா்வாகி ராஜீவ் காந்தி தாக்குதல் நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தனது கட்சியினரைச் சிறிய அளவில் கூட கண்டிக்காததால்தான் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. இது தொடா்பாக ராஜீவ் காந்தியை போலீஸாா் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.