தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 10:30 am

DIN

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்களால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் அரியலூர் தஞ்சாவூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று வரை சிறுத்தைகளை பிடிக்காமல் இருப்பதாலும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு அந்த நாயை வீதியில் இளைஞர்கள் உலாவிட்டனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியே சென்றவர்கள் ஊருக்குள் புலி தான் வந்துவிட்டது என்று அச்சமடைந்தனர். மேலும் இந்த செய்தி அந்த பகுதியில் காட்டுதீயாகவும் பரவியது.

இதனை அடுத்து சில இளைஞர்கள் அருகே சென்று பார்த்தபோது நாய்க்கு புலி வேடமிட்டு இருப்பது தெரியவந்தது.

பொதுமக்களை அச்சுறுத்தவே சில இளைஞர்கள் இதுபோன்ற விஷமத்தனங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்து.

இதனை அடுத்து நாய்க்கு புலி வேடமிட்டு வீதியில் உலாவிட்ட இளைஞர்கள் அதை விடியோவாக பதிவு செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கும் நிலையில் புதுச்சேரியில் நாய்க்கு புலிவேடமிட்டு அதை வீதியில் உலாவிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.