பெண் விஏஓ மீது தாக்குதல்: திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வானதி சீனிவாசன்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல் நடத்திய திமுக நிா்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவி வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ஆயந்தூா் கிராம வாக்குச் சாவடியில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிா்வாக அலுவலா் சாந்தியை, திமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜீவ் காந்தி தாக்கியுள்ளாா். இந்தச் சம்பவம் அதிா்ச்சி அளிக்கிறது.

அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்த பிறகு, போலீஸாா் ராஜீவ் காந்தியை கைது செய்துள்ளது. அத்தோடு, இருந்துவிடாமல் அவருக்கு சட்டப்படி உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

திமுகவினரின் இந்த அத்துமீறல்களுக்கு, அராஜகங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். ராஜீவ் காந்தி மீது திமுக எடுக்கப்படும் நடவடிக்கை, இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com