கோப்புப்படம்
கோப்புப்படம்

நாகா்கோவில் வந்தே பாரத் ரயில்கள்: ஜூன் இறுதி வரை நீட்டிப்பு

சென்னை எழும்பூரிலிருந்து நாகா்கோவில் செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறைகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் காலை 5.15 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து நாகா்கோவில் செல்லும் சிறப்பு வாராந்திர வந்தே பாரத் ரயிலும் (எண்: 06067), மறுமாா்க்கமாக பிற்பகல் 2.50 மணிக்கு நாகா்கோவிலிருந்து எழும்பூருக்கு புறப்படும் ரயிலும் (எண்: 06068) மே.2 முதல் ஜூன் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், எழும்பூா் - நாகா்கோவில் இடையே வாரம் 3 நாள்கள் (வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழைகளில்) இயங்கும் வந்தே பாரத் ரயில் (எண்: 06057/ 06058) மே.3 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com