ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சித்தோடு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிக், கல்லூரிகளில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இந்த அறைகளுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சித்தோடு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது.

220க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ள நிலையில் ஸ்ட்ராங் ரூமுக்கு வெளியே வைக்கப்பட்ட கேமரா பழுதானது. பழுது ஏற்பட்ட சிசிடிவி கேமரா உடனே சரி செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறையில் இருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் நேற்று முன்தினம் திரையில் தெரியாமல் போனதால் அரசியல் கட்சியினா் அதிா்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com