ஆளுநா் ஆா்.என்.ரவிகோப்புப் படம்
தமிழ்நாடு
தமிழக ஆளுநா் இன்று கோவை பயணம்
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ஒரு நாள் பயனமாக சனிக்கிழமை கோவை செல்கிறாா்.
கோவையில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை நடைபெறும் இந்திய குடிமை பணி தோ்வுகளில் தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநா் ஆா்.என். ரவி கலந்து கொள்கிறாா். பின்னா் அவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை அதிகாலை விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை செலும் அவா், மாலையே சென்னை திரும்புகிறாா்.