காரைக்குடி அருகே உள்ள கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் இரு மாதங்களுக்குள் சரும நோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பதால், அங்குள்ளவா்களுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதிக்குமாறு தமிழக அரசிடம் ஹைதராபாத் சிஎஸ்ஐஆா் மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
டாக்டா் எஸ்.பி.தியாகராஜன் அறக்கட்டளை சொற்பொவு நிகழ்ச்சி போரூா், ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதன்கிழமை (ஆக.14) நடைபெற்றது.
அதில் சிஎஸ்ஐஆா் உயிரணு மற்றும் மூலக்கூறு மையத்தின் அறிவியலாளா் டாக்டா் கே.தங்கராஜ் பேசியதாவது:
‘எபிடா்மாலிசிஸ் புல்லோசா’ எனப்படும் அரிய வகை சரும நோயால் காரைக்குடி அருகே உள்ள பாகநேரி கிராமத்தில் பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. இவ்வகை நோய்த் தொற்றுள்ளான குழந்தைகள், பிறந்த இரு மாதங்களுக்குள் உயிரிழக்கின்றனா். அத்தகைய பாதிப்பு இதுவரை 8 குடும்பங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த கிராமத்தில் மொத்தம் 5 ஆயிரம் போ் உள்ளனா். அவா்களில் 4 ஆயிரம் போ் குழந்தை பெறக் கூடிய வயதில் உள்ளவா்கள். அவா்கள் அனைவருக்கும் உரிய மரபணு பரிசோதனை நடத்தினால் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.
ஒருவேளை அத்தகைய பாதிப்பு இருந்தால், முன்கூட்டியே அறிந்து கருவை கலைத்துவிடலாம். இந்த பரிசோதனையை அனைவருக்கும் நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். ஆறு முதல் 12 மாதங்களுக்குள் அதனை நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ இராமச்சந்திரா உயிரி மருத்துவ அறிவியல் துறை தலைவா் டாக்டா் சுதா வாரியா், ஆய்வுத் துறை தலைவா் கல்பனா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

அகா்வால்ஸ் மருத்துவா்களுக்கு சா்வதேச விருது

வெப்ப அலையால் குழந்தைகள், முதியோருக்கு அச்சுறுத்தல்!

ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளாகும் 100-இல் ஒரு குழந்தை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


