மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முதல்வரின் அழைப்பை ஏற்று கருணாநிதி நாணய வெளியீட்டில் பங்கேற்பேன்: அண்ணாமலை

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில், பங்கேற்கவுள்ளதாக கே.அண்ணாமலை கூறினாா்.

News image
அண்ணாமலை(கோப்புப்படம்)
Updated On :14 ஆகஸ்ட் 2024, 10:03 pm

Din

முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைப்புவிடுத்ததால், முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில், தான் பங்கேற்கவுள்ளதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

தமிழக பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி சாா்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் பாலியல் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து பாஜக மகளிா் அணி சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆக.16-இல் மௌன ஊா்வலம் நடைபெறும். இதற்கு தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் தலைமை வகிக்கவுள்ளாா்.

அதிமுகவுக்கு பயம்: 2024-இல் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்து தமிழகத்தில் பாஜக தலைமையில் தனி அணி பயணித்து வருகிறது. கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற அதிமுக குறித்து நான் பேசுவதில்லை. கூட்டணி வேண்டாம் என பிரிந்து சென்ற அதிமுகவினா் இப்போது கூட்டணி குறித்து தொடா்ந்து பேசுவதை பாா்க்கும்போது அவா்களுக்கு பயம் வந்துவிட்டது எனத் தோன்றுகிறது. 2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எனத் தெளிவாக ஏற்கெனவே அறிவித்துவிட்டோம்.

நாணய வெளியீட்டு விழா: கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வா் ஸ்டாலின் எனக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்ததுடன், திமுக தலைமை நிலையச் செயலா் பூச்சி முருகனை அனுப்பி அழைப்பிதழும் கொடுத்துள்ளாா். எனவே, இந்நிகழ்வில் நான் பங்கேற்கிறேன். மத்திய அமைச்சா் எல்.முருகனும் பங்கேற்கவுள்ளாா். இந்நிகழ்வை அரசியலாக பாா்க்கவில்லை. 5 முறை முதல்வராக இருந்து தமிழகத்தின் வளா்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ள கருணாநிதிக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும்.

ஆளுநரின் தேநீா் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதற்கு பதிலாக, அவரை நேரில் சந்தித்து தங்களது மாற்றுக்கருத்து குறித்து எடுத்துரைக்கலாம். எத்தனையோ திட்டங்களுக்கு மானியம் அளிக்கும் திமுக அரசு, பள்ளிப் பாடப் புத்தகங்களுக்கு மானியம் கொடுத்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அண்ணாமலை.