ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றார் நா.முருகானந்தம்

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி நா.முருகானந்தம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

என்.முருகானந்தம்

Published On :

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி நா.முருகானந்தம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தலைமைச்செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதில் நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் தனிச் செயலராக பணியாற்றிய முருகானந்தம் தற்போது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2023 ஜூன் 30ல் பதவியேற்ற சிவ்தாஸ்மீனா ஓராண்டுக்கும் மேலாக தலைமைச்செயலாளர் பதவியில் இருந்தார்.

தமிழக அரசின் 50வது தலைமைச் செயலர் நா.முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான இவா் சென்னையைச் சோ்ந்தவா். பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான இவா் 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தோ்ச்சி பெற்று பணியில் சோ்ந்தாா்.

கடந்த 2001 முதல் 2004-ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முருகானந்தம், ஊரக வளா்ச்சித் துறையின் இணைச் செயலா், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையா், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலா் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளாா்.

தற்போது கூடுதல் தலைமைச் செயலா் பொறுப்பில் முதல்வரின் தனி பிரிவுச் செயலா் 1-ஆக பணியில் இருந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.