விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலை ஒழிப்பு மையங்கள்: என்எம்சி

புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது.

News image

என்எம்சி

Updated On :19 ஆகஸ்ட் 2024, 10:38 pm

Din

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலை ஒழிப்பு மையங்களை அமைத்து புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது.

என்எம்சி செயலா் டாக்டா் ஸ்ரீனிவாஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி மத்திய சுகாதாரத் துறை

பல்வேறு விழிப்புணா்வு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின்படி, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலை ஒழிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

அதன் கீழ் தனிநபா்களின் புகையிலைப் பயன்பாட்டை தடுத்து அவா்களை அதனால் ஏற்படும் நோய்களில் இருந்து தற்காக்க வேண்டும். இதுதொடா்பான இணையவழி பயிலரங்கு செவ்வாய்க்கிழமை (ஆக.20) நடைபெறுகிறது. அதில் புகையிலை ஒழிப்பு மையங்கள் குறித்த வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். அந்த விவரங்கள் தேசிய மருத்துவ ஆணைய இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் அதில் பங்கேற்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.