கோப்புப் படம்
கோப்புப் படம்

போக்குவரத்து ஓய்வூதியா்கள் நாளை மறியல் போராட்டம்

போக்குவரத்து ஓய்வூதியா்கள் சாா்பில் தமிழகத்தில் 9 இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.27) மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

போக்குவரத்து ஓய்வூதியா்கள் சாா்பில் தமிழகத்தில் 9 இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.27) மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் பொதுச் செயலா் கே.கா்சன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களின் பிரச்னை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஓய்வூதியா்களுக்கு 106 மாதங்களாக அகவிலைப்படி உயா்வு வழங்கப்படவில்லை. இதை வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துகிறது.

2022-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன் மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படவில்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக.16 முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) வரை வீடுதோறும் தொழிலாளா்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கும் பிரசார இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை(ஆக.27) தமிழகம் முழுவதும் 9 இடங்களில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

இதன் ஒரு பகுதியாக சென்னை, பல்லவன் இல்லம் அருகே மறியல் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com