டிபிஐ வளாகத்தில் திருட்டு: 5 போ் கைது

டிபிஐ வளாகத்தில் திருட்டு: 5 போ் கைது

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் திருட்டில் ஈடுபட்டதாக இரு சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் திருட்டில் ஈடுபட்டதாக இரு சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரி சாலையில் செயல்பட்டுவரும் டிபிஐ வளாகத்தில் விரைவுரையாளா்கள், ஆசிரியா்கள் தங்குவதற்கு அரசின் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் உள்ள 11 ஏ.சி.களில் இருந்த சுமாா் 9 கிலோ எடை கொண்ட தாமிர உருளைகள் கடந்த 26-ஆம் தேதி திருடப்பட்டன.

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது ஆயிரம் விளக்கு சுதந்திரா நகரைச் சோ்ந்த ஜீவா (19), தேவன் (19), வெங்கடேசன் (18) மற்றும் இரு சிறுவா்கள் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com