மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வலுவிழந்தது ஃபென்ஜால் புயல்

கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

News image

கடல்(கோப்புப்படம்)

Updated On :1 டிசம்பர் 2024, 9:54 am

கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது.

கடலூருக்கு வடக்கே 30 கி.மீ., விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தெற்கு இலங்கையையொட்டி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை வலுப்பெற்றது.

இந்தப் புயல் மாமல்லபரம்-காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், கரையைக் கடக்க 6 மணிநேரத்திற்கு மேலாக எடுத்துக்கொண்டது. புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

வட தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.