

இயக்குநரும் எழுத்தாளருமான ஜெயபாரதி(வயது 77) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலை காலமானார்.
குடிசை திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபாரதி, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
தமிழகத்தில் முதல்முறையாக கடந்த 1979ஆம் ஆண்டு திரள் நிதி மூலம் குடிசை படத்தை இயக்கி பிரபலமானவர் ஜெயபாரதி. இந்தப் படத்துக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன.
தொடர்ந்து, ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில், நண்பா நண்பா உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக 2010ஆம் ஆண்டில் புத்திரன் என்ற படத்தை இயக்கினார்.
புத்திரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இருப்பினும், தமிழக அரசின் மூன்று விருதுகளை இந்தப் படம் பெற்றது.
இவர் இயக்கிய நண்பா நண்பா திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!

நரம்புசாா் பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு புதிய சிகிச்சை : அரசு மருத்துவமனை வரலாற்றில் முதல்முறை

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?
தயாரிப்பாளர், இயக்குநர் தமிழழகன் காலமானார்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

