100 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலை: உதயநிதி ஸ்டாலின் உறுதி

விரைவில் 100 விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
100 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலை: உதயநிதி ஸ்டாலின் உறுதி
Updated on
1 min read

விரைவில் 100 விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு அரசு வேலை முதல்வர் கையால் வழங்கப்படும் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் 288 ஊராட்சியின் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், ஊரக வளர்ச்சி, பொதுப்பணித் துறை மூலம் 19.15 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 9.21 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட புதிய கட்டடங்கள் திறந்து வைத்தல், 7,200 பேருக்கு அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தொடர்ந்து மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி துணை முதல்வருக்குக்கு செங்கோல் வழங்கி சிறப்பித்ததுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், யாசினி இரண்டு பேருக்கு துணை முதல்வர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, முடிக்கப்பட்ட கட்டடங்களை திறந்துவைத்து, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக அண்ணல் அம்பேத்காரின் 68 நினைவு தினத்தையோட்டி மேடையில் அமைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

அம்பேத்கர் கொள்கையை கொண்டு செல்லும் திராவிட மாடல் அரசாக திமுக அரசு செயலாற்றி வருகிறது. தமிழக அரசின் ஃபென்ஜால் புயல், முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டதால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என பெருமிதமாகக் கூறினார்.

பேரவையில் அறிவிக்கப்பட்டதுபோல 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும், பெண்கள் சுயமரியாதையுடன் வாழ மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு இதுவரை 92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.

எல்லோரும் எது திராவிட மாடல் அரசு என கேள்வி கேட்பவர்களுக்கு, எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு, மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் அரசாக திகழ்வதாக பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மாதம்தோறும் 1 கோடியை 16 லட்சம் வழங்கப்படுகிறது எனவும் அதேபோல் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்பட்டு வருவதாக பெருமிதமாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com