பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்.

Published On :8 டிசம்பர் 2024, 1:19 pm IST

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும. பின்னர் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம்-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.

இதன்காரணமாக தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலுரில் கனமழை பெய்யலாம்.

இன்றும்(டிச.08), நாளையும் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.