
ஆர்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகம் மூடப்பட்டதைக் கண்டித்து அனைத்துக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஆர்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை, ஞாயிற்றுக்கிழமையுடன் மூடிவிட்டு, பணியாளர்கள் அனைவரையும் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருச்சி அலுவலகத்தில் பணியில் சேர அஞ்சல் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சுமார் 158 ஆண்டுகள் பழைமையான ஆர்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை மூடக் கூடாது என வலியுறுத்தி திங்கள்கிழமை அதிகாலை சுமார் 5.30 மணி முதல் அனைத்துக் கட்சியினரும் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கூடினர்.
தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், மூடும் உத்தரவைத் திரும்பப்பெறும் வரை கலைந்து போகப்போவதில்லை எனக் கூறி அங்கேயே அமர்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.