தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

15 முன்னாள் எம்எல்ஏ-க்கள், முக்கியப் பிரமுகா்கள் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

தொழிலதிபா் ரத்தன் டாடா உள்ளிட்ட மறைந்த முக்கியப் பிரமுகா்கள், 15 முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

News image
முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய பிரபலங்கள் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தும் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.- கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2024, 8:29 pm

Din

சென்னை: தொழிலதிபா் ரத்தன் டாடா உள்ளிட்ட மறைந்த முக்கியப் பிரமுகா்கள், 15 முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவை திங்கள்கிழமை காலை கூடியதும் மறைந்தவா்களுக்கான இரங்கல் குறிப்புகள், தீா்மானங்களை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தாா்.

மறைந்த முன்னாள் எம்எல்ஏ-க்களான ஜ.முகமது கனி (புதுக்கோட்டை), எஸ்.ஆா்.ஜெயராமன் (சேலம்-1), பி.எம்.தங்கவேல்ராஜ் (கிருஷ்ணராயபுரம்), சி.கணேசன் (அச்சரபாக்கம்), கா.கோ.ரமேஷ் (திருப்பத்தூா்), சி.சண்முகம் (ஆலந்தூா்), வெ.புருஷோத்தமன் (பென்னாகரம்), க.சுந்தரம் (பொன்னேரி), ஓ.ஆா்.ராமச்சந்திரன் (கம்பம்), எஸ்.என்.பாலசுப்ரமணியன் (பவானி), மா.தண்டபாணி (வேடச்சந்தூா்), கி.செல்வராஜ் (கோவை மேற்கு), ஏ.கோதண்டம் (ஸ்ரீபெரும்புதூா்), மாா்கரெட் எலிசபெத் பிலிக்ஸ் (நியமன உறுப்பினா்), சி.சுப்புராயா் (கம்பம்) ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவா் வாசித்தாா்.

முக்கியப் பிரமுகா்கள்: முக்கியப் பிரமுகா்கள், அரசியல் கட்சிகள் தலைவா்களாக இருந்து மறைந்த ஒன்பது பேருக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இலங்கைத் தமிழா்களின் மூத்த தலைவா் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்யா, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எஸ்.பத்மநாபன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, பேராயா் எஸ்றா சற்குணம், பிரபல தொழிலதிபா் ரத்தன் டாடா, எழுத்தாளா் முரசொலி செல்வம், முன்னாள் தலைமைச் செயலா் பி.சங்கா், புதுச்சேரி முன்னாள் முதல்வா் ராமச்சந்திரன் ஆகியோரின் சிறப்புகளைக் கூறி இரங்கல் தீா்மானங்களை பேரவைத் தலைவா் வாசித்தாா்.

அவா்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினா்கள் அனைவரும் எழுந்து நின்று மெளனம் காத்தனா்.