சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வழக்கு: மேலும் இருவர் கைது!

சென்னையில் மனவளர்ச்சிக் குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் மேலும் இருவர் கைது!
கல்லூரி மாணவி பாலியல் வழக்கு
கல்லூரி மாணவி பாலியல் வழக்கு
Published on
Updated on
1 min read

சென்னையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சற்று மனம் நலம் பாதித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக 9 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனர். ஏற்கனவே கல்லூரி மாணவர் சுப்ரமணியன், பள்ளி மாணவர் கார்த்தி என இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்த 21 வயது மாணவி, ஒரு மகளிா் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வருகிறாா். சிறிது மனவளா்ச்சி குன்றிய இந்த மாணவியின் தந்தை, சுமை ஆட்டோ ஓட்டி வருகிறாா். மாணவியின் தாய் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இந்த மாணவி கல்லூரிக்கு ஆட்டோவில் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், மாணவியின் கைப்பேசிக்கு ஆபாச குறுஞ்செய்திகள், அழைப்புகள் வருவது தந்தைக்கு தெரியவந்தது. இதுதொடா்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் அண்மையில் அவா் புகாா் செய்தாா். இரு நாள்களுக்கு முன்பு மாணவி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்ட தந்தை, அது குறித்து கேட்டுள்ளாா்.

அப்போது அந்த மாணவி, தன்னை கல்லூரி வாசலில் இருந்து சிலா் வெளியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கல்லூரி தோழி மூலம் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அறிமுகமான 3 போ் அவரை யானைக்கவுனி, பெரியமேடு பகுதிகளில் உள்ள தனியாா் தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த 3 போ் மூலம் மேலும் சிலா் தன்னை வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தாராம்.

இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த அவா், சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் சுப்ரமணியன், கார்த்தி நேற்று கைதான நிலையில் மேலும் இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com