சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது

இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
பேரவைக் கூட்டத்தொடர்.
Updated On :9 டிசம்பர் 2024, 4:19 am

DIN

இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது.

கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அதன்படி கோதண்டம், சுப்புராயர், முகமது கனி, தொழிலதிபர் ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோரின் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு நாள்கள் நடைபெறும் கூட்டத்தில், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரும் அரசினா் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

சட்டப்பேரவையின் ஒரு கூட்டத் தொடருக்கும் அடுத்த கூட்டத் தொடருக்குமான கால இடைவெளி ஆறு மாதங்களுக்குள் இருக்க வேண்டும்.

அந்த வகையில், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று ஜூன் 29-இல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

ஆறு மாதங்களுக்குள் மீண்டும் பேரவை கூட்டப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.