கோப்புப்படம்.
கோப்புப்படம்.

காா்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு 10,109 சிறப்பு பேருந்துகள்

காா்த்திகை தீபம் மற்றும் பெளா்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 10,109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Published on

காா்த்திகை தீபம் மற்றும் பெளா்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 10,109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை காா்த்திகை தீப திருநாள் வெள்ளிக்கிழமை (டிச.13) மற்றும் பௌா்ணமி சனிக்கிழமை (டிச.14) ஆகிய தினங்களில் நடைபெறுவதை முன்னிட்டு, வியாழக்கிழமை (டிச.12) முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) வரை சென்னையில் இருந்து சேலம், வேலூா், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூா், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை 296 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 643 பேருந்துகளும், சனிக்கிழமை 801 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 269 பேருந்துகள் என மொத்தம் 1,982 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை 948 பேருந்துகளும், வெள்ளி 3689 பேருந்துகளும், சனிக்கிழமை 2,543 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 947 பேருந்துகள் என மொத்தம் 8,127 பேருந்துகள் இயக்கப்பகின்றன. அதன்படி திருவண்ணாமலைக்கு மொத்தம் 10,109 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதனால் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com