எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ராணிப்பேட்டையில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

News image
காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
Updated On :16 டிசம்பர் 2024, 9:07 am

DIN

ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு சென்னை தலைமைச்செயலத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார், அந்த இலக்கினை எய்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபு குழுமம் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபு இண்டஸ்ட்ரீயல் குழுமம் இருபதுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக்கொண்ட பன்னாட்டு குழுமம் ஆகும். இக்குழுமம் விளையாட்டு காலணிகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதன் மூலம் உலகளவில் இரண்டாவது பெரிய காலணி உற்பத்தியாளராக திகழ்ந்து வருகிறது. இக்குழுமம் நைக், கன்வர்ஸ், வேன்ஸ், பூமா, யுஜிஜி, அண்டர் ஆர்மர் போன்ற சர்வதேச அளவில் வணிகமுத்திரை கொண்ட நிறுவனங்களுக்கு காலணிகள் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சேவைகளையும் வழங்கி வருகிறது.

மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஹோங்ஃபு நிறுவனத்திற்கு, ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கம் தொழில் பூங்காவில் 200 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்நிறுவனம் தற்போது 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கவுள்ளது. இத்திட்டத்திற்கு முதல்வர் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்

துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலாளர் வி. அருண்ராய் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.