/

தங்கத்தின் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது...

News image
Updated On :18 டிசம்பர் 2024, 4:41 am

DIN

சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராம் ரூ.7,140-க்கும், சவரன் ரூ.57,120-க்கும் விற்பனையான நிலையில், திங்கள்கிழமை எவ்வித மாற்றமுமின்றி அதே விலையில் தங்கம் விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை ஆன நிலையில் புதன்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.57,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று(டிச.18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 57,120-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,135-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், மூன்றாவது நாளாக வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.