ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சாலைத் தடுப்பில் பைக் மோதி சென்னை ஐடி ஊழியர்கள் பலி!

மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் நிலைதடுமாறி சாலைத் தடுப்பில் மோதியதாகத் தகவல்

News image
Updated On :22 டிசம்பர் 2024, 12:54 pm IST

மதுபோதையில் பைக்கில் சென்ற ஐடி ஊழியர்கள், சாலைத் தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சென்னை, பெருங்குடியில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்களான கேரளத்தைச் சேர்ந்த விஷ்ணு (24), பம்மலைச் சேர்ந்த கோகுல் (24) இருவரும் மது அருந்திவிட்டு, இன்று அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் பள்ளிகரணை அருகே அதிவேகமாகச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ஆதிபுரிஸ்வரர் கோயில் அருகே சென்றபோது, நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, அவர்களின் இருவரது உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.