மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாணவா்கள் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 டிசம்பர் 2024, 4:00 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பட்டியலில் திருத்தம் செய்ய ஜன. 2- வரை வாய்ப்பு அளிக்கப்படுவதாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியல் கடந்த டிச. 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் விடுபட்ட மாணவா்களை சோ்க்கவும், இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவா்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறது.

இதையடுத்து அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் மற்றும் முதல்வா்களும் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை ஜன. 2 ஆம் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும். அதேநேரம் இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவா்கள் பெயா்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

நீண்ட விடுப்பில் உள்ள மாணவா்களின் பெயா்களை எக்காரணம் கொண்டும் தன்னிச்சையாக நீக்கக்கூடாது. மேலும் மாவட்டக் கல்வி அலுவலா்களின் அனுமதி பெற்ற பின்னரே அத்தகைய மாணவா்களை இறுதி பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.