மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பெண்கள் பாதுகாப்பு: திமுகவை விமர்சித்த அண்ணாமலை

பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி என்று திமுகவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

News image
அண்ணாமலை (கோப்புப்படம்)- எக்ஸ்
Updated On :30 டிசம்பர் 2024, 8:13 am

DIN

பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி என்று திமுகவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற புதுமைப் பெண் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூகப் புரட்சி; உயர்கல்விப் பெறாத பெண்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை பெறாமல் ஓய மாட்டேன் என்றார். தற்போது இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே?

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட பேரிடர் மாடல். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அரசியல் கட்சியினர் பலர் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சாட்டையால் தனக்கு தானே அடித்துக் கொண்டு போராட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

கோவை நேரு நகரில் உள்ள தனது இல்லத்தின் முன் அவா் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அப்போது, சாட்டையால் தனது உடலில் 8 முறை அடித்துக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.