தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்... உதயநிதி!

நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கப்பட்டும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 1:07 pm

DIN

நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கப்பட்டும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்ததும் கட்சின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  

விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி பலரிடையே நிலவிவந்த நிலையில், இதன்மூலம் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே இது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும். புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா ஜனநாயக நாடு. இதில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.