தமிழ்நாட்டில் மணல் கொள்ளையின் தலைநகரம் வேலூர் மாவட்டம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையால் அரசுக்கு ரூ.4,730 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை,  மணல் கொள்ளையின் தலைநகரமே வேலூர் மாவட்டம் தான் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மணல் கொள்ளையின் தலைநகரம் வேலூர் மாவட்டம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையால் அரசுக்கு ரூ.4,730 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாஜக மாநில தலைவா் கே. அண்ணாமலை,  மணல் கொள்ளையின் தலைநகரமே வேலூர் மாவட்டம் தான் என தெரிவித்தார்.

கே.அண்ணாமலை வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசார நடைபயணம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளையால் மட்டுமே அரசுக்கு ரூ.4,730 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. யாரெல்லாம் மணல் கொல்லையில் ஈடுபட்டு இருக்கிறார்களோ அவர்களை  அமலாக்கத்துறை விடாது. தமிழ்நாட்டில் மணல் கொள்ளையின் தலைநகரமே வேலூர் மாவட்டம் தான்.

மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடப் போவதாக பரவலாக பேசப்படுநது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,நான் ஏன் வேலூர் தொகுதியில் போட்டியிட கூடாது. 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன் இதற்கு முன்னதாக அமலாக்கத்துறை அனுப்பிய 7 சம்மன்களை புறக்கணித்திருந்தார். இந்நிலையில் எட்டாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து அவர் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார். அப்போது தான் கைதாவது உறுதி என்று தெரிந்துகொண்டவர் இரண்டு மாதத்திற்கு முன்போ ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தொகுதி எம்.எல்.ஏ வை ராஜிநாமா செய்ய வைத்துள்ளார். தற்போது அந்த தொகுதியில் ஹேமந்த் மனைவியை போட்டியிட முடிவு செய்துள்ளனர். ஹேமந்துக்கு தற்பொழுது நீதிமன்றம் ஐந்து நாள் காவல் அளித்துள்ளது.

திமுக ஆர்.எஸ் பாரதி போல் அமைச்சர் துரைமுருகன் தற்போது நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்.குறிப்பாக உப்பு சாப்பிட்டால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய கட்சியை காப்பாற்றும் வேளையில் ஈடுபடட்டும். சீமான் கட்சி தற்போது வேகமாக கலைந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் பிரிவினைவாதம் பேசுபவர்கள் அல்ல.என்னுடைய பாதை முற்றிலும் வேறு சீமானுடைய பாதை முற்றிலும் வேறு.பிரிவினைவாதம் வேண்டுமா அல்லது தேசியம் வேண்டுமா என்று மக்கள் முடிவு எடுப்பார்கள்.

நான் எம்பிஏ (நிதி) படித்தவன், 10 லட்சம் பேர் எழுதிய கேட் தேர்வில் 99.4 சதவிகிதம் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவன். எனக்கு அமைச்சர் துரைமுருகனை விட நன்றாக நிதி விவகாரம் தெரியும். எப்படி ஒரு அறிக்கையை படிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அமைச்சர் துரைமுருகன் படிக்காமல் இருக்கலாம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com