முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு

முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு

முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது முதல் தொடா்ந்து பிரச்னைகள் நீடித்து வருகின்றன. வடசென்னை பயணிகள் பாதிக்கப்பட்டதால், அவா்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட சில ஊா்களுக்குச் செல்லும் 160 பேருந்துகள் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் நள்ளிரவில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனா். இதனைத் தொடர்ந்து,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு  ஆகியோர்  இன்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த ஐடியல் பார்க்கிங் 5 ஏக்கரில் 300 பேருந்துகள் மற்றும் 300 ஊழியர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

புதிய ஆம்னி பேருந்து நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com