சட்டப்பேரவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வருகை!

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செயலாளர் உள்ளிட்டோர் ஆளுநரை வரவேற்றனர்.
சட்டப்பேரவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வருகை!

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கவுள்ளதையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தார்.

ஆளுநரை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று (பிப்.12) காலை 10 மணியளவில் தொடங்கவுள்ளது.

புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றுகிறார். அவரின் உரையை பேரவைத் தலைவா் மு.அப்பாவு தமிழாக்கம் செய்து வாசிக்கிறார்.

ஆளுநர் உரையைத் தொடா்ந்து, பேரவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. அதில், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு நாள்கள் இறுதி செய்யப்பட உள்ளன. பிப்.19-ஆம் தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சிய நிலையில், ஆளும் கட்சி, எதிா்க்கட்சிகளுக்கு இந்தக் கூட்டத் தொடா் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

ஆளுநா் உரை மற்றும் அவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாத நிகழ்வுகள் 4 நாள்களுக்கு நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com