நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுகவில் இணைந்தார் நடிகை கெளதமி!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் பாஜகவிலிருந்து விலகியிருந்த நடிகை கெளதமி.

News image
Updated On :14 பிப்ரவரி 2024, 2:32 pm

DIN

பாஜகவிலிருந்து விலகியிருந்த நடிகை கெளதமி அதிமுகவில் இன்று (பிப். 14) இணைந்துள்ளார். அதிமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக அறியப்பட்ட நடிகை கெளதமி, பா.ஜ.கவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.

இதனிடையே, சமீபத்தில் நடிகை கௌதமி சென்னை ஆணையர் அலுவலகத்தில் 25 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டார் என்று புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாகவும் நடிகை கெளதமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை கெளதமி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து, அ.தி.மு.கவில்இணைந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கெளதமி, எடப்பாடி பழனிசாமியின் பணிகள் என்னைக் கவர்ந்ததால் நான் அதிமுகவில் இணைந்தேன். அதிமுகவில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாஜகவில் இருந்து ஏன் விலகினேன் என்பதை உரிய நேரத்தில் விரிவாகக் கூறுகிறேன் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.