கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம்
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம்DOTCOM

கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும் பேருந்துகளில் 14,440 இருக்கைகள் காலி!

கிளாம்பாக்கத்திலிருந்து வெள்ளிக்கிழமை பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாகவுள்ளதால் முன்பதிவு செய்து பயணிக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, கிளாம்பாக்கத்திலிருந்து வெள்ளிக்கிழமை(பிப்.16) பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாகவுள்ளதால் முன்பதிவு செய்து பயணிக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக இணையவழி முன்பதிவு வசதியுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிளாம்பாக்கத்திலிருந்து வெள்ளிக்கிழமை(பிப்.16) விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் 283 பேருந்துகளில் இணையவழியில் 11,848 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 9,794 இருக்கைகள் காலியாகவுள்ளன. இவற்றுடன் விழுப்புரம் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் 1,762 இருக்கைகளும், சேலம் பேருந்துகளில் 1,399 இருக்கைகளும், கும்பகோணம் பேருந்துகளில் 1,443 இருக்கைகளும், கோவை பேருந்துகளில் 42 இருக்கைகள் என மொத்தம் 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாகவுள்ளன. இதே போல், சனிக்கிழமை(பிப்.17) 14,895 முன்பதிவு இருக்கைகளும், ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) 15,340 முன்பதிவு இருக்கைகளும் காலியாகவுள்ளன.

இதன்படி, தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை(பிப்.16) இயக்கப்படும் பேருந்துகளில் உள்ள 89,507 முன்பதிவு இருக்கைகளில் 84,060 முன்பதிவு இருக்கைகளும், சனிக்கிழமை (பிப்.17) 85,265 முன்பதிவு இருக்கைகளும், ஞாயிற்றுக்கிழமை(பிப்.18) 86,411 இருக்கைகளும் காலியாகவுள்ளது. இதனால், பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, செயலி மூலம் முன்னரே முன்பதிவு செய்து சிரமமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com