காதல் திருமணம் திமுக - காங்கிரஸ் போல இருக்கக் கூடாது: அண்ணாமலை

காதல் திருமணம் திமுக - காங்கிரஸ் போல இருக்கக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
காதல் திருமணம்  திமுக - காங்கிரஸ் போல  இருக்கக் கூடாது: அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எல்.முருகன் மறுபடியும் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுகிறார் என பாஜக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. மத்தியப் பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பல முறை உயர்த்தப்பட்டது. 1952 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றது.

காதல் திருமணம்  திமுக - காங்கிரஸ் போல  இருக்கக் கூடாது: அண்ணாமலை
ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!

ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தை படிக்கவில்லையா? இப்போது இல்லையென்றாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும். 2024 ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையாக இருந்தால் பிரச்னை இருக்காது. நாங்கள் யாரையும் போன் போட்டு கட்சிக்கு வர அழைப்பதில்லை. விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் இணைகிறார்கள். ஒரு கட்சியை உடைத்து, எங்கள் கட்சியை வளர்க்கும் வேலையை பாஜக செய்யாது.

இளைஞர்களுக்கு காதலர் நாள் வாழ்த்துகள். திமுக - காங்கிரஸ்போல காதல் திருமணம் இருக்கக் கூடாது. மோடி - பாஜக போல காதல் திருமணம் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com