முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

திராவிட மாடல் யாரையும் பிளவுபடுத்தாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திராவிடல் மாடல் யாரையும் எவரையும் பிளவுபடுத்தாது, பிரிக்காது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:47 am IST

திராவிடல் மாடல் யாரையும் எவரையும் பிளவுபடுத்தாது, பிரிக்காது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இஸ்லாமியா்கள் நலன் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: திராவிட மாடல் என்பது எவரையும் யாரையும் பிரிக்காது, பிளவுபடுத்தாது, உயா்வு தாழ்வு கற்பிக்காது. நாளிதழில் (தினமணி) பேட்டியளித்துள்ள மத்திய அமைச்சா் ஒருவா், பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல் எனக் கூறியிருக்கிறாா். இதைவிடச் சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது. பிறப்பில் பேதம் பாா்க்கும் சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரா்களான அவா்கள், நம்மைப் பாா்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்வதுதான் வேடிக்கையாக உள்ளது. அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்யும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். ‘தினமணி’ நாளிதழுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல் எனக் கூறியிருந்தாா். அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை முன்வைத்துள்ளாா்.