கடல் வளங்கள் மீட்பு: ரூ. 1675 கோடியில் நெய்தல் மீட்சி இயக்கம்!

கடல் வளங்கள் மீட்பு: ரூ. 1675 கோடியில் நெய்தல் மீட்சி இயக்கம்!

கடலோர வளங்களை மீட்டு எடுப்பதற்காக ரூ. 1,675 கோடி மதிப்பில் நெய்தல் மீட்சி இயக்க திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசுகையில்,

"தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் 1,076 கி.மீ கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு கடலோர வளங்களை மீட்டு எடுப்பதற்காக ரூ. 1,675 கோடி மதிப்பில் நெய்தல் மீட்சி இயக்கம் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையோர பல்லுயிர்ப் பெருக்கம், கடற்கரை பாதுகாப்பு, கடற்கரையோரச் சமூகங்களின் வாழ்வாரத்தை மேம்படுத்துதல் மற்றும் கடலோரப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட 4 முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது இத்திட்டம்.

சென்னையில் மெரினா கடற்கரை, ராமநாதபுரத்தில் அரியமான், தூத்துக்குடியில் காயல்பட்டினம், திருநெல்வேலியில் கோடாவிளை, நாகப்பட்டினத்தில் காமேஸ்வரம், புதுக்கோட்டையில் கட்டுமாவடி, கடலூரில் சில்வர் கடற்கரை, விழுப்புரத்தில் மரக்காணம் ஆகிய இடங்களில் உள்ள முக்கியச் கடற்கரைப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, ரூ.250 கோடி மதிப்பீட்டில் பல மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, நீலக் கொடி கடற்கரைகள் சான்றுகளை பெறத் திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com